பெட்ரோல் மற்றும் டீசல் வாராந்திர சில்லறை விலை ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிப கூட்டுறவுகள் அமைச்சர் ஹம்சா ஸைநுடின் கூறினார்.
இப்புதிய முறை அடுத்த புதன்கிழமையிலிருந்து (மார்ச் 29) தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
எண்ணெய் நிறுவனங்களுடம் கலந்தாலோசித்த பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்க ஒப்புக்கொண்டோம். புதிய முறையின் கீழ் எரிபொருள் விலை மார்ச் 30 லிருந்து அமலுக்கு வரும் என்றும் ஆர்டிஎம் நேரடி ஒலிபரப்பில் அவர் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட வாராந்திர விலைக்கு குறைவாக விற்க விரும்பும் நிறுவனங்கள் அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்று கூறிய அமைச்சர், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் விற்பனையாளர்களும் புதிய விலை நிர்ணயிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் நிர்ணயிக்கும் விலைக்கு மாறாக வேறு விலைக்கு விற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.