தகரர் ஒருவர் “டான் சிறீ” பட்டத்திற்கு ரிம2 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகவும் தாம் அந்த வேண்டுகோளை மறுத்து விட்டதாகவும் ஜொகூர் சுல்தான் கூறினார்.
அந்த தகரரின் பெயரை வெளியிடாத சுல்தான், தாம் பட்டங்களை விற்பதில்லை என்று அவரிடம் கூறியதாக சுல்தான் நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ்வுடனான நேர்காணலில் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களின் ஆட்சியாளர்கள் பட்டம் பெறுகிறவர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பது தமக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை என்று சுல்தான் மேலும் கூறினார்.
எனினும், நாடுதழுவிய அளவில் பட்டங்கள் தாராள மனப்பான்மையுடன் வழங்கப்படுவதை அவர் ஒப்புக்கொண்டார்.
“மலேசியாவில், நான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு கூழாங்கல்லை எறிந்தால், அது ஒரு டத்தோவின் தலையைத் தட்டும், அதே கூழாங்கல் இன்னொரு டத்தோவின் தலையிலிருந்து துள்ளி எழுந்து, அதிர்ஷ்ட வசத்தால், ஒரு டான் சிறீயைக்கூட தட்டும்”, என்று சுல்தான் நகைச்சுவையுடன் கூறினார்.
ஜொகூர் அரண்மனையிலிருந்து பட்டங்கள் பெறுவது மிகக் கடினமாகும் என்று கூறிய சுல்தான், வேட்பாளர்கள் நான்கு தடவை வரையில் விழிப்புடன் சோதிக்கப்படுகின்றனர் என்றார்.
“எனது ஆட்சியில், (பட்டங்கள்) பெறுவது மிகக் கடினம்” என்று சுல்தான் மேலும் கூறினார்.
ஆனால் உண்மையில் எத்தனை பேர் மலேசியாவில் நியாயமாக பட்டங்களை பெற்றனர்? அத்துடன் பெரும்பாலான பட்டங்கள் அடிவருடிகளுக்குத்தானே போய் சேருகின்றது? எத்தனை குற்றவாளிகள் மக்கள் எதிரிகள் நாதாரிகள் பட்டத்துடன் வளம் வருகின்றனர். எத்தனை பேர் 1957 ல் இருந்து பட்டங்களை வாங்கி உள்ளனர் என்பது மேலே இருப்பவனுக்கு தெரியும்.