நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சர்ச்சைக்குரிய ஷியாரியா நீதிமன்ற (குற்றவியல் நீதி)ச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்க கிழக்கு மலேசிய பிஎன் கட்சிகளைத் தனித்தனியே சந்தித்தார் என ஓரியெண்டல் டெய்லி அறிவித்தது.
அச்சந்திப்பில் பிஎன் கட்சிகள், குறிப்பாக சரவாக்கைச் சேர்ந்தவை சட்டம் 355 திருத்தங்களை ஏற்க மறுத்ததாக தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது என அந் நாளேடு கூறியது.
மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் எந்தவொரு முடிவும் எடுக்க முடியவில்லை. நஜிப் இருதலைக் கொள்ளி எறும்பு போலானார் என அவ்வட்டாரம் கூறிற்று.
“அந்த விவகாரம் பிஎன் உச்ச மன்றத்தில் மீண்டும் எழுப்பப்படலாம்” என்றும் அது தெரிவித்தது.
நஜிப்புடன் சந்திப்பு நடந்ததை பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) தலைவர் ஜேம்ஸ் மாசிங் உறுதிப்படுத்தினார். ஆனால், அதில் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்தார்.
சரவாக் முதலமைச்சர் உண்மையிலேயே anak jantan .