மலேசியாவில் சொத்துடமையில் அதிகம் முதலீடு செய்துள்ளவர்கள் யாரென்றால் சீன நாட்டு நிறுவனங்கள்தாம். அவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் யுஎஸ்$2.1 பில்லியனை சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர்.
இதைத் தெரிவித்த சிங்கப்பூர் பைனான்சியல் டைம்ஸ், அதே காலக் கட்டத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் யுஎஸ்985 பில்லியனை முதலீடு செய்ததாகக் கூறியது.
ஆஸ்திரேலியா, ஹாங்காங் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் சொத்து விலை குறைவாக இருப்பதால் சீனத் தலைநில முதலீட்டாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதை விரும்புகிறார்களாம்.
அதிக முதலீடு செய்வது மட்டும் அல்ல. மலேசியர்களுக்கும் அவர்கள் வேலைக் கொடுப்பதில்லை! இது தான் அவர்களின் பலம்!