உள்துறை அமைச்சு, பினாங்கு அரசின் ரேலா படையான பினாங்கு தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்)க்கு விதித்திருந்த தடையை முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உள்துறை அமைச்சின் தடைவிதிப்பை நிலைநாட்டி பினாங்கு உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 22-இல் அளித்த தீர்ப்பை மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக நிராகரித்தது.
நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையில் நீதிபதிகள் கமர்டின் ஹஷிம், மேரி லிம் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பிபிஎஸ்ஸிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அத்தனை பொருள்களையும் திருப்பிக் கொடுக்குமாறும் நீதிமன்றம் உள்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டது.
எதிர் காட்சிகள் எது நல்லது செய்தாலும் அம்னோவுக்கு பிடிக்காது. பல அம்னோ அடிவருடி நீதிபதிகள் எதிர் கட்சிகளுக்கு பெரும்பாலும் எதிராகவே தீர்ப்பு அளிப்பார்கள். இது ஒரு மாற்றம்.