மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, தம் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குச் செல்ல ரிம1.4 மில்லியன் செலவில் மாற்றுச் சாலை அமைப்பதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்கிறார்.
சாலை அமைப்பது அரசாங்கத்தின் தனியுரிமை என்றவர் சொன்னதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
“இது என் வீடு அல்ல. அரசாங்க வீடு”, என்றாரவர்.
“அவ்வீட்டுக்குச் செல்ல ஒரு சாலை தேவை என்று அரசாங்கம் நினைத்தது, சாலையைக் கட்டியது.
“எனக்கு அதில் சம்பந்தமில்லை”, என்றார்.
ரிம1.4 மில்லியன் செலவில் சாலை அமைக்கப்பட்ட விவரத்தை நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதில் ஒன்றில் குறிப்பிட்டிருந்த பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப், அதில் சாக்கடைகள், பாதுகாப்புச் சாவடி, மின் வேலி, பாதுகாப்புக் கட்டமைப்பு, தெரு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்ட செலவுகளும் அடங்கும் என்றார்.
அதனால என்ன பண்டி ரோட்டுக்கு வந்தது வீட்டுக்கு வந்தாலும் அனுபவி ராஜா அனுபவி….
இந்த கம்மனாட்டிக்கு கதை சொல்லவா தெரியாது? என்ன செய்வது–நமக்குத்தான் காதில் பூ சுத்தி இருக்கிறதே. விடிய எந்த காலமோ. பெரும்பாலான நாதாரிகள் உட்கார்ந்து தின்று கொழுத்து நம்பிக்கை நாயகனை அரியணையில் வைத்து அழகு பார்க்கின்றன. இதற்கு எல்லாம் காகாதிமிறும் ஒரு காரணம்.