ஒருவருக்கு “டான்ஸ்ரீ” பட்டம் கிடைப்பதற்குப் பரிந்துரைக்க ஜோகூர் சுல்தானுக்கு ரிம 2மில்லியன் கையூட்டுக் கொடுக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வணிகர் இன்று புத்ரா ஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்தது.
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) விசாரணைக்கு உதவியாக அந்த 54 வயது நபரை இன்று தொடங்கி ஏப்ரல் 4வரை தடுத்து வைக்க மெஜிஸ்ட்ரேட் நிக் இஸ்ஃபானி வான் அப் ரஹ்மான் உத்தரவிட்டார்.
அந் நபரின் செயலை ஜோகூர் சுல்தான் கடந்த சனிக்கிழமை தமது முகநூல் பக்கத்தில் அம்பலப்படுத்தி இருந்தார்.
அது குறித்து விசாரணை நடத்திய எம்ஏசிசி, சம்பந்தப்பட்ட நபர் நள்ளிரவுக்குள் சரணடைய வேண்டும், தவறினால், அவரது பெயர் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
அவர் நேற்று பிற்பகல் சரணடைந்தார்.