மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கூச்சாய் லாமாவில் உள்ள டிஏபி எம்பி தெரேசா கொக் அலுவலகத்தில் இன்று அதிரடிச் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
அவர்கள் தேடும் வாரண்டுடன் வந்ததாக சிபூத்தே எம்பியின் உதவியாளர் அலிஸ் லான் கூறினார்.
சோதனை நடந்தபோது கொக் அலுவலகத்தில் இல்லை.
அதிகாரிகள் ஸ்கிம் மிஸ்ரா உசியா இமாஸ்(எஸ்எம்யுஇ) தொடர்பான ஆவணங்களைத் தேடி வந்ததாக லான் கூறினார்.
“அதிகாரிகள் (சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர்) ஜமால் (முக்மட் யூனுஸ்) செய்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்”, என்று லான் கூறினர்.
அலுவலகப் பணியாளர்கள் ஆவணங்களை ஒப்படைக்குமுன்னர் அவற்றை ஒளிநகல் எடுத்துக்கொண்டனர்.
இதனிடையே, தெரேசா கொக் அது அதிரடிச் சோதனை அல்ல என்று மறுத்தார்.
“அவர்கள் ஆவணங்களைக் கேட்டார்கள். கொடுத்தோம். அவ்வளவுதான். அது அதிரடிச் சோதனை அல்ல”, என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
ஜமால் யூனுஸ் சொன்னால் நீங்கள் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் ! அவர் நம் நாட்டுக்கு கிடைத்த அதிபுத்திசாலி அல்லவா !
MACC – உண்மை ஊழல்வாதிகளை ஒன்றும் புடுங்க முடியாது. எல்லாம் அம்னோ குண்டர்கள் .