மகாதிர் மற்றும் நஸ்ரி ஆகிய இருவருக்குமிடையிலான விவாதத்திற்கு போலீசார் கொடுத்திருந்த அனுமதி இப்போது இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கும்புலான் மீடியா காராங்கிராப் கூறுகிறது.
“விந்தையானது. மகாதிர்-நஸ்ரி விவாதத்திற்கு அனுமதி அளிக்கும் கடிதம் எங்களுக்கு நேற்று கிடைத்தது. இன்று மாலை அந்த அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது”, என்று ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் ஹுசாமுடின் யாக்கோப் கூறினார்.
இது இரத்து செய்யப்பட்டதற்கு காரணம் போலீஸ் பெற்றுள்ள புகார்கள் என்று கூறப்படுகிறது.
“சுற்றுப்பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆட்சேபங்களைப் பெற்றுள்ளது”, என்று போலீஸ் கூறியது.
பொது ஒழுங்கு அடிப்படையில் இந்த விவகாரத்தை நன்கு ஆராய்ந்த பின்னர், அனுமதி இரத்து செய்யப்படுகிறது என்று போலீஸ் தெரிவித்தது.
இந்த விவாதம் ஏப்ரல் 7 இல், காராங்கிராப் தலைமையகத்தில் இரவு மணி 7 லிருந்து 12 வரையில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த விவகாரம் குறித்து ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஷாபியன் மாமாட்டுடன் தொடர்பு கொண்ட போது இவ்விவாகாரம் குறித்து மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார்.
“நாளைக்கு விளக்கம் அளிப்பேன். ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
ஹாஹாஹா …… இதுவே போதுமடா உங்களை கவிழ்க்க ….