பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு
ஆளாக்கியவர்களையே மணக்கலாம் என்ற கருத்து அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறார்கள் மீது மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பிஎன் தேசேக் குளுகோர் எம்பி ஷாபுடின் யாஹ்யாவின் அப்படியொரு கருத்தை முன்வைத்தார்.
“ஒவ்வொரு குழந்தைக்கும் வாழவும், கனவு காணவும், விளையாட்டாக பொழுது போக்கவும் உரிமை உண்டு.
“தங்கள் பிள்ளைகள் பண்பார்ந்த சூழலில் வளர்வதற்கு உதவுவது பெற்றோரின் பொறுப்பு. மலேசிய குழந்தைகளின் நலன் காப்பது அரசாங்கதினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாக்கும்”, என ரஹ்மான் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
அறிவு இல்லாத மூடனும் மலேசியாவில் ஆளும் காட்சியிலும் , அமைச்சர் பதவியில் இருக்களும் என்பதனை உலகம் அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு .
இதிலிருந்து தெரிய வேண்டும் எப்படி பட்ட அறிவு ஜீவிகளை கொண்ட ஆட்சி இது என்று. சிரிப்பதா என்று கூட தெறிய வில்லை– ஏனெனில் இந்த நாதாரிகள்தான் சிரித்துக்கொண்டே வங்கிக்கு செல்கின்றார்கள். இதுதான் இன்றைய நிலை. நம்முடைய கல்வியின் தரம் அப்படி.
ஒரு முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கே அதிர்ச்சி என்றால் அனைத்து ஷரியா நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தை கேட்டால் அமைச்சருக்கு நெஞ்சடைப்பு வந்து விடும் போலிருக்கிறது.