பாரஸ்ட் சிட்டியில் வீடு வாங்கிய சீன நாட்டவருக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்

forest cityபாரஸ்ட்   சிட்டி   மேம்பாட்டு    நிறுவனம்,   அதன்   மேம்பாட்டுத்   திட்டத்தில்  வீடு  வாங்கிய   சீன    நாட்டவருக்குப்  பணத்தைத்    திருப்பிக்  கொடுக்க    தயாராகி  வருகிறது.   சீனா  கெடுபிடிமிக்க   மூலதனக்   கொள்கைகளைக்  கடைப்பிடிப்பதே  இதற்குக்  காரணமாகும்.

“நாங்கள்  சீனாவில்  விற்பனை  செய்வதை   நிறுத்தி   விட்டோம்”,  என   கண்ட்ரி  கார்டன்   ஹோல்டிங்ஸ்   உதவித்   தலைவர்   ஜூ  ஜியான்மின்   கூறியதாக   சவுத்  சைனா  மார்னிங்  போஸ்ட்   இன்று   அறிவித்தது.

பாரஸ்ட்  சிட்டியில்   சொத்து   வாங்க    முன்பணம்   கட்டியவர்கள்   எஞ்சிய  தொகையை    அனுப்ப  முடியவில்லை   என்றால்  “பரிவர்த்தனையை   இரத்துச்   செய்யலாம்,  அதற்குத்  தண்டம்  விதிக்கப்படாது”   என்றாரவர்.