அரசாங்க உயர்க் கல்விக் கழகங்களில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல் துறைகளில் 5 விழுக்காடு இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்குக் கொடுக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டைக் கல்வி மையமாக்கும் முயற்சியின் தொடர்பில் இம்முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
முன்சொன்ன மூன்று துறைகளிலும் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள்(ஐபிடிஏ) 5விழுக்காட்டு இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கலாம், சந்தை விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்குக் கட்டணம் விதிக்கலாம் என நஜிப் கூறினார்.
“நம் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ளனர். சொல்லப்போனால், தேவைக்கு மேலேயே உள்ளனர். இம்முடிவால் ஐபிடிஏ நன்மை அடையும். நம் மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுடன் கலந்துறவாட வாய்ப்பாக அமையும்”, என்றாரவர்.
பிரதமர் ஆறு-நாள் இந்தியப் பயணத்தின் இறுதியில் புது டில்லியில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.
அந்த 5% தமிழர்களின் கோட்டாவா ?
வணக்கம். போதிய மருத்துவர்கள் இருந்தால் ஏன் இன்னமும் பொது மக்கள் கால்கடுக்க அரசாங்க மருத்துவ மையங்களில் நிற்கிறார்கள். அப்படி என்றால் எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது. இதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.
நம்பிக்கை நாயகனின் அள்ளிவிடல். ஐயா நாம் தமிழர் டெங்கில் அவர்களே– இந்த நம்பிக்கை நாயகன் எத்தனை அரசாங்க மருத்துவ மையங்களில் கால் கடுக்க நின்றிருக்கிறான் -இதை பற்றி தெரிய? கடந்த கால பிரதமனின் மகன்- வேறு என்ன சொல்ல?
முன்பு அரசாங்கம் எரிபொருளுக்கு செலவழித்த உதவித்தொகையை அரசாங்க மருத்துவமனைகளுக்கு செலவு (மருத்துவ நிபுணர்களை அரசாங்க மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்துவது, மருத்துவமனைகளை மற்றும் மருத்துவ கருவிகளை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கு) செய்திருந்தால், மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக தொகை கொடுத்து மருத்துவம் பார்க்கும் நிலை வந்திருக்காது.
அரசாங்க மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை போதுமான மருத்துவ கருவிகள் இல்லாமை போன்றவற்றால் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்று கூறுவதை விட மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றன என்றே சொல்லலாம்.