மீடியாகோர்ப் நஜிப்பிடம் மன்னிப்பு கேட்டது

okசிங்கப்பூரின்   மீடியாகோர்ப்    சேனல்  5,    அதன்  ‘Ok Chope!’ தொலைக்காட்சி   நிகழ்ச்சியில்   பிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்கின்  மனம்   புண்படும்   கருத்துகள்   இடம்பெற்றதற்காக  மன்னிப்பு   கேட்டுக்கொண்டது.

“சேனல்  5ம்,   Ok Chope!  நிகழ்ச்சித்   தயாரிப்புக்  குழுவும்   கடந்த   வார  Ok Chope!   நிகழ்ச்சியில்   மலேசியப்  பிரதமர்   நஜிப்   பற்றிப்   பேசப்பட்டதற்கு   உளப்பூர்வமாக   மன்னிப்பு    கேட்டுகொள்கின்றன”,  என   மீடியோகோர்ப்   வாடிக்கையாளர்  பிரிவுத்    தலைவர்    டெப்ரா  சூன்   இன்று  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

“மறுஒளிபரப்பில்   அப்பகுதியை  எடுத்து   விட்டோம்.   நேர்ந்த   தவற்றுக்கு  நிபந்தனையற்ற    மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறோம்”,  என்றாரவர்.

மார்ச்  29-ல்  ஒளியேறிய   நிகழ்ச்சியில்,  நகைச்சுவைக்   கலைஞர்களைக்  கொண்ட   ஒரு  குழு   கலந்துகொண்டது.  அவர்களிடம்   நஜிப்   சம்பந்தப்பட்ட   செய்தித்  தலைப்புகள்   கொடுக்கப்பட்டு   அவற்றைப்  பூர்த்தி  செய்யுமாறு   கேட்டுக்கொள்ளப்பட்டது.