தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தொகுதி நிர்ணயத்தில் சில “புதிய, அதிர்ச்சி அளிக்கும் மற்றும் குழப்பம் உண்டாக்குகிற” தகவலை மாநில அரசு கண்டுள்ளதாக பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.
அந்தத் தகவல் அடிப்படையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாநில ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
பினாங்கு மாநில அரசின் சார்பில் ஏப்ரல் 7 க்குப் பின்னர் தாம் வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாக லிம் மேலும் கூறினார்.
ஆனால், அந்தப் புதிய தகவல் என்னவென்பதை வெளியிட மறுத்து விட்ட அவர், மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிகேஆர் பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் மாலிக் காசிம் கோலாலம்பூரிலிருந்து திரும்பியவுடன் அத்தகவலை வெளியிடப் போவதாகக் கூறினார்.