பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி பாஸுக்கு நெருக்கமான ஒருவர் 1எம்டிபி நிதி பெற்றார் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டார்.
அந்தப் பணம் பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுக்கப்பட்டது என்று அவர் கூறிக்கொண்டார்.
இன்று பிற்பகல், நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ரஃபிஸி இதற்கு எதிர்வினையாற்றும்படி பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு சவால் விட்டார்.
தம்மிடம் தகவல் இருக்கிறது கூறிய ரஃபிஸி, பொதுத் தேர்தல் வரவிருப்பதால், இந்த விவகாரத்தை வெளிக்கொணர வேண்டியிருக்கிறது. இன்னும் ஒரிரு வாரத்தில் இதை வெளிப்படுத்தப் போவதாக அவர் கூறினார்.
“நான் பாஸின் பதிலுக்காக காத்திருக்கப் போகிறேன், ஏனென்றால் அங்குள்ள சிலருக்கு நான் கூறுவது என்ன என்று தெரியும்”, என்று ரஃபிஸி மேலும் கூறினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் இக்குற்றச்சாட்டை மறுத்தார். ரஃபிஸி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) புகார் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.