செய்தியாளர்கள் திருந்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஷாபுடின் எச்சரிக்கை

childசிறார்  திருமணம்,  பாலியல்  வல்லுறவு   ஆகியவை   குறித்த  தம்  கருத்துகளைத்    தப்பும்தவறுமாக    வெளியிட்ட      ஊடகங்களுக்கு    எதிராக    சட்ட    நடவடிக்கை   எடுப்பது   குறித்து    ஆலோசித்து  வருகிறார்   தாசெக்   குளுகோர்    எம்பி   ஷாபுடின்   யாஹ்யா.

“எல்லாவற்றையும்   சரிபார்க்கப்  போகிறேன்.  தப்பாக   செய்தி   வெளியிட்டிருந்தால்   சம்பந்தப்பட்ட   செய்தித்தாள்களுக்கும்    செய்தியாளர்களுக்கும்     எதிராக   வழக்கு   தொடுப்பேன்”,  என்று    நன்யாங்  சியாங்  பாவ்   வெளியிட்டுள்ள   காணொளி  ஒன்றில்  ஷாபுடின்   கூறினார்.

ஊடகங்கள்   திருந்த   வேண்டும்    என்றும்   அவர்   கேட்டுக்கொண்டார்.

“திருந்துங்கள்,  அவதூறு  கூறாதீர்கள். சொல்வதைச்  சரியாகக்  கேளுங்கள்,  சரியான  முறையில்   செய்தியாகக்  கொடுங்கள்,  அதுதான்  நன்னெறி,  பொறுப்புடைமை”,  என்றாரவர்.

ஷாபுடின்,   பாலியல்   வல்லுறவால்    ஏற்படும்    சமுதாயப்   பிரச்னைகளுக்குத்   தீர்வாக    பாலியல்   வல்லுறவில்  ஈடுபட்டவரையே    பாலியல்  வல்லுறவுக்கு  உள்ளாக்கப்பட்டவருக்கு    மணம்   செய்து  வைக்கலாம்  என்று   மக்களவையில்    தெரிவித்ததாக     அறிவிக்கப்பட்டிருந்தது.

பெண்கள்  12  வயதிலேயே   உடலளவில்    திருமணம்    செய்துகொள்ளும்  பருவத்தை   அடைந்து  விடுவதாகவும்   அவர்  கூறினாராம்