நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது எளிய தண்டனை என்றே நூர் ஜஸ்லானும் கருதுகிறார்

nurநாடாளுமன்றத்தில்   ஆர்ப்பாட்டம்   செய்து   ஷா ஆலம்   எம்பி  காலிட்  சமட்டைத்   தாக்கியவர்கள்   சிறு  குற்றச்  சட்டத்தின்கீழ்  குற்றஞ்சாட்டப்பட்டது  குறித்து   கருத்துக்  கேட்டதற்கு    அந்த    எண்மர்மீதும்   இன்னும்  கனமான  குற்றச்சாட்டு   சுமத்தப்பட்டிருக்க  வேண்டும்     என  உள்துறை  துணை   அமைச்சர்   நூர்  ஜஸ்லான்   கூறினார்.  இது     தம்முடைய  தனிப்பட்ட   கருத்து   என்பதையும்  அவர்  வலியுறுத்தினார்.

“என்னைக்  கேட்டால்,  அவர்கள்  பாதுகாக்கப்பட்ட   ஒரு  பகுதியில்    கட்டுப்பாடின்றி   நடந்து  கொண்டிருப்பதால்   கடும்   தண்டனை  கொடுப்பதே  பொருத்தமாக  இருக்கும்”,  என்றாரவர்.

ஆனால்,  போலீசார்  விசாரணை   செய்து  அதன்  அடிப்படையில்தான்  குற்றம்   சாட்டியுள்ளனர். அது   அவர்களின்  உரிமை   என்றும்   அவர்   சொன்னார்.

சிறுகுற்றங்கள்  சட்டம்   குற்றஞ்சாட்டப்படுபவருக்கு  ரிம100 அபராதம்   விதிப்பதற்கு   மட்டுமே   வகை   செய்கிறது.