லெம்பா பந்தாய் வாக்காளர்கள் 100 பேர் அவர்களின் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தலைமையில், அவர்களின் தொகுதியில் எல்லைத் திருத்தம் தொடர்பில் தேர்தல் ஆணையம்(இசி) முன்வைத்துள்ள இரண்டாவது பரிந்துரைக்குத் தங்கள் ஆட்சேபணைகளை இசியின் கூட்டரசுப் பிரதேச அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
முதல் பரிந்துரைக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக நுருல் இஸ்ஸா கூறினார். அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் சில இன்னும் மாற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன என்றாரவர்.
அவற்றுள் ஒன்று புக்கிட் அமான். இப்போது செகாம்புட் தொகுதியில் உள்ள அது தொகுதி எல்லைச் சீரமைப்பின்கீழ் லெம்பா பந்தாய் தொகுதியில் வருகிறது.
“கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? புக்கிட் அமான், லெம்பா பந்தாய் தொகுதிக்கு அருகில்கூட இல்லை. இந்த அடிப்படை தகவலை இசி-க்குப் படித்துப் படித்துச் சொல்ல வேண்டியுள்ளது”, என நுருல் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு ஒரு தெளிவான விளக்கம் தேவை என்றாரவர்.