கடந்த ஆண்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விவகார இலாகா (ஜாசா) ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கூட்டத்தில் எதிர்ப்பு அட்டைகளை ஏந்தி இருந்த ஐந்து மாணவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று, யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாரா அதன் மாணவர் அரிப்பின் அமினுக்கு ரிம 200 அபராதம் விதித்து, கடும் எச்சரிக்கையும் கொடுத்தது. அம்மாணவர் கடந்த ஆண்டு அக்டோபர் 11 இல் நடந்த கூட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, யூனிவர்சிட்டி மலாயா அதன் நான்கு மாணவர்கள் – ஹோ சி யாங், டான் ஜியா யு, லவ் லி யாங் மற்றும் சுவா ஹுன் தி – இந்த 1எம்டிபி எதிர்ப்பில் கலந்துகொண்டதற்காக அவர்கள் குற்றவாளிகள் என தீர்மானித்தது.
அவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. லவ்விற்கு ரிம600 அபராதம் விதிக்கப்பட்டது. ஹோ மற்றும் சுவா ஆகிய இருவருக்கும் தலா ரிம300 அபராதம் விதிக்கப்பட்டது. டானுக்கு ரிம150 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நால்வரும் யூனிவர்சிட்டி மலாயா புதிய இளைஞர் மன்றத்தின் குழு உறுப்பினர்களாவர்.
டிஎபி இளைஞர் பல்கலைக்கழக விவகார இயக்குனர் லியோங் யு செங் இத்தண்டன நஜிப்பையும் 1எம்டிபியையும் பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்டதாக கூறினார்.
அரசாங்கமும் பல்கலைக்கழகங்களும் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதல் ஆகியவற்றுக்கு பெடரல் அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உத்தரவாததை மதிக்க வேண்டும் என்று லியோங் வலியுறுத்தினார்.
மலேஷியா போலே….. வேற என்ன செய்ய முடியும்… மக்களை முட்டாள் ஆக்குவதே இந்த கல்வி இலக்கோ ??