கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்), ரிம 1மில்லியன் செலவில் உருவாக்கிய KLCares செயலி ஒன்றரை ஆண்டுகளில் செயலிழந்து விட்டதுபோல் காணப்படுவது ஏன் என்று விளக்கமளிக்க வேண்டும்.
“அச்செயலி என்னவானது? அதற்கு ஏன் அவ்வளவு பணம் செலவிடப்பட்டது? இப்போது அது செயல்படுவதில்லையே, ஏன்?”, என செகாம்புட் எம் லிம் லிப் எங் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கேள்வி எழுப்பினார்.
புதன்கிழமையிலிருந்து டிபிகேஎல்-லிடம் தொடர்புகொள்ள முயன்று வருவதாகவும் ஆனால், முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.
செயலிக்கான செலவுகளை ஒப்பிட்ட அவர், செலாயாங் நகராட்சி மன்றம் அதேபோன்ற செயலிக்கு ரிம27,000 -தான் செலவிட்டது என்றும் கூறினார்.