வாங்கும் வீடுகள் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது உறுதியாக தெரியாத நிலையில் வீடு வாங்க நினைப்போர், வாங்குவதைச் சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறது தேசிய வீடு வாங்குவோர் சங்கம் (எச்பிஏ).
நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர், கட்டி முடிக்கும் காலம்(இஒடி) மேலும் நீட்டிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை கொடுக்கும்வரை வீடு வாங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என எச்பிஏ தலைமைச் செயலாளர் சாங் கிம் லூங் கூறினார்.
மேலும், வீடமைப்பாளர்களும், அமைச்சிடம் இஓடி கேட்பதில்லை என்ற மாற்றப்பட முடியாத உத்தரவாதத்தைத் தர வேண்டும் என்றாரவர்.
ஏப்ரல் 3-இல், அமைச்சர் நோ ஒமார், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் 2014-இலிருந்து 304 இஒடி-கள் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டதை சாங் சுட்டிக்காட்டினார்.
“அமைச்சர் அவருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது வீடுகள் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.
“எனவே, அறிவார்ந்த வீடு வாங்குவோர் வீடு வாங்குவதை நிறுத்தி வைப்பது நல்லது. சில விசயங்கள் நடக்கட்டும். பிறகு வாங்கலாம்”, என சாங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
வீடு தேவை என்பதால் தான் மக்கள் அவசர அவசரமாக வீடுகள் வாங்குகிறார்கள். அரசாங்கம் தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தட்டிக் கழிக்க கூடாது!