பூலாவ் ஜெரெஜாக் மேம்பாட்டுப் பணிகளை நிறுத்த பினாங்கு மக்கள் கோரிக்கை

island #SavingJerejak   என்ற  தலைப்பில்   நேற்று  நடைபெற்ற  ஒரு  கருத்தரங்கில்  கலந்து  கொண்டவர்கள்   பினாங்கு   அரசாங்கத்திடம்   எட்டு  பரிந்துரைகளை   முன்வைத்துள்ளனர்.

அவர்கள்  மலேசியாவின்  அல்கட்ராஸ்  என்று  அழைக்கப்படும்   பூலாவ்  ஜெரெஜாக்   இப்போது  எப்படி  உள்ளதோ  அப்படியே   பாதுகாக்க   வேண்டும்   என்று   விரும்புகிறார்கள்.

அத்தீவில்  1,200  வீடுகள்,   தங்கு  விடுதிகள்,  சிறு  படகுகளும்  உல்லாச  படகுகளும்   அணைவதற்கான  மரினா,  பொழுதுபோக்கு  பூங்கா,  தீவைச்  சுற்றிலும்  11.5 கிலோமீட்டருக்கு   சைக்கிள்  பாதை   அமைக்கும்   திட்டம்   அறிவிக்கப்பட்டிருப்பதை   அடுத்து   அவர்கள்  இவ்வாறு  கூறினர்.

பாயான்  லெப்பாஸ்  கடலோரத்துக்கு   அப்பால்   உள்ள   அத்தீவில்   எல்லா  வகை  மேம்பாட்டுத்  திட்டங்களும்   உடனடியாக   நிறுத்தப்பட   வேண்டும்   என்று  அவர்கள்  வலியுறுத்தினர்.

மொத்த  தீவும்   பினாங்கு   மாநில   பாரம்பரியச்  சட்டத்தின்கீழ்   மாநில  பாரம்பரிய   சொத்தாக     அறிவிக்கப்பட   வேண்டும்   என்றவர்கள்   கேட்டுக்கொண்டனர்.