முன்னாள் கிளந்தான் ஆட்சிக்குழு உறூபினரான ஹுசாம் மூசா, பார்டி அமனா நெகரா (அமனா) உதவித் தலைவராக்கப்பட்டு கிளந்தானில் கட்சியின் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளந்தான் அரசில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் ஹுசாமுக்கு உண்டு என அமனா தலைமைச் செயலாளர் முகம்மட் அனுவார் தாஹிர் கூறினார்.
“அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாக இருந்தது. அவர் அடக்கமானவர், தோக் குரு (நிக் அப்துல் அசீஸ்)வின் சீடருமாவார்”.
கோலாலும்பூரில் நிக் அப்துல் அசீஸ் சிந்தனைகள் மீதான கருத்தரங்குக்குப் பின்னர் முகம்மட் அனுவார் செய்தியாளர்களிடம் பேசினார்.
கிளந்தானில் அமனாவின் தேர்தல் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஹுசாமிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
“அது உண்மைதான். அதே நேரத்தில் அவர் மாநிலத்தோடு நின்றுவிடக் கூடாது தேசிய அளவிலும் பங்காற்ற வேண்டும்”, என்றவர் கூறினார்.
ஹுசாம் இப்போது சாலோர் சட்டமன்ற உறுப்பினர். இதற்கு முன்பு அவர் கூபாங் கிரியான் எம்பி -ஆகவும் கிஜாங் சட்டமன்ற உறுப்ப்பினராகவும் இருந்தார்.