பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கொண்டுவந்த ஷியாரியா நீதிமன்றத் திருத்த சட்டவரைவுமீது விவாதம் நடக்காதபடி பார்த்துக்கொண்ட மக்களவைத் தலைவர் மக்களவைத் பண்டிகார் அமின் மூலியாவின் செயலானது அவ்விவகாரம் நீடிப்பதையே பிஎன் விரும்புகிறது என்பதைக் காண்பிப்பதாக பிகேஆர் தலைவர் ஒருவர் கூறினார்.
“1965, ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டம் அல்லது சட்டம் 355 திருத்தம் மீதான சர்ச்சையை ஒரு அரசியல் மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அது சமுதாயத்தில் அமைதியற்ற நிலையை உண்டாக்கி விடும்”, என பிகேஆர் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அபிப் பஹார்டின் கூறினார்.
“ திருத்தங்கள்மீது விவாதங்களுக்கு இடந்தராமல் நாடாளுமன்றக் கூட்டத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்த மக்களவைத் தலைவர் பண்டிகாரின் செயலையும் கண்டிக்கிறோம்.
“அவரது செயல் நீண்ட காலத்துக்கு சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் உண்டாக்க இவ்விவகாரத்தை இழுத்துக்கொண்டே செல்ல பிஎன் திட்டமிடுகிறது என்பதற்குச் சான்றாகும்”, என அபிப் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.