தவ்பிக்: சட்டம் 355மீது அரசாங்கத்தின் முரண்பாடான நிலைப்பாடு ஒரு அரசியல் தந்திரம்

affidavitஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்ட(சட்டம்355)த்  திருத்தங்களை   மக்களவையில்   தாக்கல்   செய்யும்   விசயத்தில்    அரசாங்கத்தின்   முரண்பாடான   நிலைப்பாடு,   பொதுத்   தேர்தல்   நெருங்கிக்  கொண்டிருக்கும்   வேளையில்   அம்னோவும்   பாஸும்  “சேர்ந்து  அரங்கேற்றும்   ஒரு   அரசியல்   நாடகம்”.

முன்னாள்   துணைப்  பிரதமர்   டாக்டர்   இஸ்மாயில்  அப்துல்   ரஹ்மானின்  புதல்வர்     முகம்மட்  தவ்பிக்   இஸ்மாயில்   நீதிமன்றத்தில்  பதிவு   செய்துள்ள     பிரமாணப் பத்திரத்தில்  இவ்வாறு   குறிப்பிட்டுள்ளார்.

அதை   அரசாங்கம்    தாக்கல்     செய்யும்     என்று    கடந்த  மாதம்    துணைப்  பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி  கூறியதையும்   பின்னர்,   பாஸ்  தலைவர்   அப்துல்   ஹாடி    ஆவாங்கே   தாக்கல்     செய்வார்    எனப்  பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்    அறிவித்ததையும்   அவர்   சுட்டிக்காட்டினார்.

“ஆக,   சட்டம்   355மீதான   தீர்மானம்    மலேசியாவுக்கும்   அதன்  குடிமக்களுக்கும்    நன்மை   செய்வதற்காகக்  கொண்டுவரப்படவில்லை”,  என  தவ்பிக்    தம்முடைய  இரண்டாவது   பிரமாணப்   பத்திரத்தில்   கூறினார்.  அவருடைய   முதலாவது  பிரமாணப்  பத்திரம்    கடந்த   மாதம்   தாக்கல்    செய்யப்பட்டது.

மக்களவைத்   தலைவர்    பண்டிகார்   அமின்   மூலியா   தீர்மானத்தைத்   தாக்கல்    செய்ய  ஹாடியை  அனுமதித்ததை     அடுத்து    இரண்டாவது    பிரமாணப்   பத்திரம்    பதிவு   செய்யப்பட்டது.

அதில்    சட்டத்  திருத்தத்துக்காகக்  கொண்டுவரப்பட்ட   தீர்மானம்    அரசமைப்புக்கு   முரணானது    என்று     அறிவிக்க    வேண்டும்    என்று   தவ்பிக்   கேட்டுக்கொண்டிருக்கிறார்.