எஸ்ஆர்சி மீதான விசாரணையை நிறுத்தச் சொன்னதில்லை: ஏஜி விளக்கம்

ag16  மாதங்களுக்குமுன்    எஸ்ஆர்சி   விவகாரத்தில்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   குற்றமேதும்   புரியவில்லை    என்று    அறிவித்த     சட்டத்துறைத்   தலைவர்    முகம்மட்  அபாண்டி  அலி,    “NFA (என்எப்ஏ)”  அல்லது  “நோ பர்தர்   எக்சன்”   என்றால்   வழக்கு  முடிந்து  விட்டதாகப்   பொருள்படாது    என்று   விளக்கமளித்துள்ளார்.

எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து   ரிம42 மில்லியன்   பிரதமரின்   தனிப்பட்ட   வங்கிக்  கணக்குக்கு   மாற்றிவிடப்பட்டது  மீதான  விசாரணையை   நிறுத்துமாறு   தாம்  என்றும்   சொன்னதில்லை     என்று  ஏஜி  விளக்கியதாக   மலேசியன்  இன்சைட்   கூறிற்று.

“நான்  (ஜனவரி   26,  2016)  செய்தியாளர்   கூட்டத்தில்   மேல்  விசாரணை   இல்லை    என்று   கூறியது  உண்மை.  அது   பிரதமரின்   வங்கிக்  கணக்குக்குச்   சென்றதாகக்  கூறப்படும்   ரிம2.6  பில்லியன்  குறித்துக்  கூறப்பட்டது”,  என்றவர்   சொன்னதாக   அது  குறிப்பிட்டது.

“நாங்கள்   என்எப்ஏ   என்று    அறிவித்தால்   அதைத்  தள்ளி  வைக்கிறோம்    என்றுதான்  பொருள்.  புதிய   ஆதாரங்கள்   கிடைத்தால்   அதன்மீது   விசாரணை  தொடரும்..

“என்எப்ஏ    என்று   அறிவித்தாலுங்கூட     எந்தக்  கோப்பும்   நிரந்தரமாக  மூடப்படுவதில்லை,  1எம்டிபி-க்கும்   அது   பொருந்தும்”,  என்றாரவர்.