நன்யாங் சியாங் பாவ் சமயப் பதற்ற நிலையைத் தூண்டி விடுவதாகக் கூறி நூறாண்டுப் பழைமையான அந்நாளேட்டை உள்துறை அமைச்சு இழுத்து மூட வேண்டும் என்று பாஸ் கட்சியினர் சுமார் 100 பேர் கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள், அந்நாளேடு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் , மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாகச் சித்திரிக்கும் கார்டூன் (கேலிச்சித்திரம்) ஒன்றை வெளியிட்டதைக் கண்டித்து நன்யாங் சியாங் பாவ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடையே பேசிய பாஸ் இளைஞர் உதவிச் செயலாளர் நுருல் இஸ்லாம் முகம்மட் யூசுப்பும் மற்ற தலைவர்களும் அந்நாளேட்டை மூட வேண்டும் என்று கோரினர்.
ஆனால், நன்யாங் நிர்வாகத்திடம் கண்டனக் குறிப்பை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ் இளைஞர் தகவல் தலைவர் அஹமட் பாஹ்ட்லி ஷாரி, அக்கோரிக்கை ஒரு தனிப்பட்ட கருத்துத்தான் என்றார்.
“நன்யாங் (கேலிச் சித்தரதுக்காக) மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதால் அக்கோரிக்கை இன்னும் பசிசீலனை நிலையில்தான் உள்ளது.
“அது குறித்து பிறகு முடிவு செய்வோம்”, என்றார்.
குரங்கு சேட்டை கார்டூன் வெளியிட்ட நாளேட்டை மூடுவது முதலில் குரங்கு சேட்டை புரியும் உங்கள் ஆன்மீக தலைவர் ஹாடியை மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்கள்.