2016-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகள் வரிசையில் மலேசியாவுக்கு 10வது இடம்

amnesty 2016-இல்  மரண  தண்டனை   நிறைவேற்றப்பட்ட   நாடுகளின்  பட்டியலில்   மலேசியா  பத்தாவது   இடத்தில்   இருப்பதாக   எம்னெஸ்டி   இண்டர்நேசனல்    அறிக்கை   கூறுகிறது.

கடந்த    ஆண்டு    மலேசியாவில்   ஒன்பது   பேர்  தூக்கிலிடப்பட்டனர்.  குறைந்தது   36  பேருக்கு  மரண   தண்டனை  விதிக்கப்பெற்றது.

அதிகமான   மரண   தண்டனை   நிறைவேற்றப்பட்ட   நாடுகளின்   பட்டியலில்   567  மரண   தண்டனைகளை   நிறைவேற்றிய   ஈரான்  இரண்டாவது   இடத்தில்   உள்ளது.  அதனை    அடுத்து   சவுதி  அராபியா (154),  ஈராக் (88),  பாகிஸ்தான் (87),   எகிப்து (44),   அமெரிக்கா (20),  சோமாபியா (14),  வங்காள  தேசம் (10).

இந்த  வரிசையில்   முதலிடம்  சீனாவுக்குத்தான்.  ஆனால்,  எம்னெஸ்டி    அங்கு  மரண  தனடனைக்கு   ஆளானோர்   எண்ணிக்கையை   வெளியிடவில்லை.  அது  அரசாங்க   இரகசியம்.

“சீனா  இதுவரை   மரண  தண்டனை   பெற்றோர்  குறித்து   எந்தப்  புள்ளிவிவரத்தையும்   வெளியிட்டதில்லை.  ஆனால்,  கிடைக்கும்     தகவல்களை  வைத்துப்    பார்க்கையில்   ஒவ்வோராண்டும்   சீனாவில்  ஆயிரக்கணக்கானோருக்கு   மரண  தண்டனை  விதிக்கப்பட்டு    நிறைவேற்றப்படுவது   தெரிகிறது”,  என    அவ்வறிக்கை   கூறிற்று.