உள்துறை அமைச்சு நன்யாங் சியாங் பாவுக்கு காரணம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது

 

NanyangSiangPauபாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மக்களைவத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாக காட்டும் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்ட சீன நாளிதழான நன்யாங் சியாங் பாவுக்கு காரணம் கோரும் கடிதத்தை உள்துறை அமைச்சு அனுப்பியுள்ளது.

இந்தக் கேலிச்சித்திரம் பொது ஒழுங்கை சிதறடிக்கும், தீய நோக்கங்களை ஊக்குவிக்கும், விரோதம், வெறுப்பு ஆகியவற்றுடன் இதர மக்கள் அல்லது இனங்களைப் பற்றிய தவறான கருத்துப்பாங்கை ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் அல்வி இப்ராகிம் கூறுகிறார்.

இது நோக்கமற்ற முறையில் நாடாளுமன்றத்தையும் இஸ்லாத்தையும் ஏளனம் செய்வதாகத் தெரிகிறது, ஏனென்றால் கேலிச்சித்திரத்தில் காணப்படும் சட்டம் 355 மசோதா இஸ்லாமிய விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்று அல்வி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கிறார்.

இக்கடிதத்திற்கு பதில் அளிக்க பிபிபிஎ சட்டம் 1984 வின் கீழ் நன்யாங்கிற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.