அடுத்த தேர்தலில் நஜிப் வீழ்வார்: மகாதிர் ஆருடம்

dr m60  ஆண்டுக்கால   பிஎன்   கூட்டணி  ஆட்சி   முடிவுக்கு   வந்து  கொண்டிருக்கிறது.   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   இவ்வாறு   ஆருடம்   கூறியிருப்பதாக   அமெரிக்காவைத்   தளமாகக்  கொண்டுள்ள  புளூம்பெர்க்   அறிவிக்கிறது..

“இன்று   யாருடன்  நீங்கள்   பேசினாலும்,  எவரும்  அரசாங்கம்  குறித்து,  அதிலும்  குறிப்பாக  (பிரதமர்)   நஜிப்  (அப்துல்  ரசாக்)  குறித்து    நல்லதாகச்  சொல்வதில்லை”,  என  நேற்று    ஒரு   நேர்காணலின்போது  மகாதிர்   புளூம்பெர்கிடம்   கூறினார்.

நஜிப்புக்குக்   குழிபறிக்க   1எம்டிபி  மோசடி   தவிர்த்து   உயர்ந்துவரும்   வாழ்க்கைச்   செலவினங்களும்     உதவும்    என   எதிரணியினர்   நம்புகின்றனர்.

தேர்தலில்   எதிரணி   வெற்றி  பெற்றால்,    இப்போது   6 விழுக்காடாக  உள்ள   பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)யைக்  குறைப்படும்   என்றும்    மகாதிர்   சொன்னார்.

ஆனால்,  ஜிஎஸ்டி-யை   ஒரேயடியாக   எடுத்துவிட   முடியாது.  “அது   அரசாங்க  நிதி  நிலவரத்தைப்   பாதிக்கும்”,  ஆனால்,  அவசியமற்ற   திட்டங்கள்   இரத்துச்  செய்யப்படலாம்   என்றாரவர்.