போலீசார் 1எம்டிபி மீதான விசாரணையை முடித்துக்கொண்டு அறிக்கையைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டது.
“சிறிது காலத்துக்குமுன் (விசாரணையை) முடித்தோம்”, என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று கோலாலும்பூரில் கூறினார்.
1எம்டிபி-இன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் மீதான புலன் விசாரணையை விரைவில் முடிக்குமாறு சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது காலிட் இவ்வாறு கூறினார்.
ஆனால், போலீசார் எஸ்ஆர்சிமீது விசாரணை நடத்தவில்லை என்றாரவர்.
இதற்குமுன்பு, போலீஸ் பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வின் அறிக்கையை அடிப்படையாக வைத்து 1எம்டிபிமீது விசாரணை செய்து வருவதாக தெரிவித்திருந்தது.
2016, ஆகஸ்டில் அறிக்கையின் முதல் கட்டம் முழுமை பெற்று விட்டதாக காலிட் கூறினார்.
பிஏசி அறிக்கை, மற்றவற்றோடு அந்த முதலீட்டு நிறுவனத்தின் பலவீனங்களுக்கு 1எம்டிபி முன்னாள் சிஇஓ ஷாரோல் அஸ்ரால் ஹில்மி-தான் பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்தது.
குட் ஸ்டார் நிறுவனத்துக்கு யுஎஸ்$700 மில்லியனை மாற்றிவிட 1எம்டிபி இயக்குனர் வாரியம் அனுமதி அளிக்க மறுத்ததையும் அறிக்கை கவனப்படுத்தி இருந்தது. குட் ஸ்டார், பினாங்கில் பிறந்தவரான கோடீஸ்வரர் ஜோ லாவுக்குச் சொந்தமான நிறுவனம்.
1எம்டிபி மோசடிகளுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் தொடர்புண்டு என்றும் கூறப்படுகிறது, சில தரப்புகள் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் காணப்பட்ட ரிம2.6பில்லியன் 1எம்டிபி-இலிருந்து வந்ததுதான் என்றும் கூறுகின்றனர்.
போலீஸ்/சட்டதுறை அலுவலகம் தண்ட சம்பளம் வாங்குவதுபோல் 1எம்டிபி விசாரணை அறிக்கையை வாங்கி வைத்து கொள்வார்கள் அவ்வளவுதான்.
இதை எல்லாம் நம்பினால் நம்மை விட மடையர்கள் வேறு இருக்க முடியாது– நம்பிக்கை நாயகனின் தில்லு முள்ளுகள்.