கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்கிறார் அதன் தலைவர் ஷாரிர் அப்துல் சமட்.
பெல்டாவிடம் ரிம22 பில்லியனுக்குச் சொத்துகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“ரிம22 பில்லியன் பெறுமதியுள்ள சொத்துகள் பெல்டாவிடம் உள்ளன. இது பெருங்கொண்ட சொத்து.
“இதனால் தெரிவது என்னவென்றால், பெல்டாவுக்குச் சிக்கல் ஏதும் இல்லை. ”. ஷாரிர், நேற்றிரவு கோலாலும்பூரில் ‘பெல்டா எதை நோக்கிச் செல்கிறது’ என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
பெல்டாவின் சொத்துகளில் பெரும்பகுதி யுகே-இல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவை பெல்டா குடியேற்றக்காரர்களின் பிழைப்புக்கு நேரடியாக உதவுவதில்லை என்பதால் அவற்றை விற்றுவிடுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார்.