சைனுடின்: ஜாஹிட் என்றும் பிரதமர் ஆக முடியாது

dpmஅஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   என்றும்   துணைப்  பிரதமர்தான்.  அவர்   பிரதமராக    முடியாது.    ஹிஷாமுடின்  உசேன்   சிறப்புப்   பணி   அமைச்சராக   நியமிக்கப்பட்டிருப்பது   அதைத்தான்  காண்பிக்கிறதாம்.  முன்னாள்  அம்னோ  அமைச்சர்   சைனுடின்   மைடின்   இவ்வாறு   கூறுகிறார்.

“அந்நியமனம்     நாட்டின்  வருங்காலம்     ஹிஷாமுடின்   கைகளில்தான்  என்பதை   உறுதிப்படுத்துகிறது.

“அவர்   (ஹிஷாமுடின்)  மலேசிய   பிரதமர்  ஆவார். அஹ்மட்  ஜாஹிட்டைப்  பொருத்தவரை   அவர்   என்றென்றும்   துணைப்  பிரதமராக  இருக்கத்தான்  இலாயக்கு”,  என   உத்துசான்    மலேசியாவின்   முன்னாள்   தலைமை    செய்தி     ஆசிரியருமான சைனுடைன்   தம்முடைய   வலைப்பதிவில்   பதிவிட்டிருந்தார்.

மக்களில்  பலர்   ஜாஹிட்டை   அடுத்த  பிரதமராகவே   நினைக்கத்   தொடங்கி   இருந்தார்கள்.  மேலும்,  ஹிஷாமுடினை  விட  ஹாஹிட்டுக்குத்தான்  கட்சியில்  ஆதரவும்     அதிகம்  என்று   சைனுடின்    கூறினார்.

ஆனால்,  திடீரென்று   ஹிஷாமுடின்   சிறப்புப்  பணிகளுக்கான    அமைச்சராக  நியமிக்கப்பட்டிருப்பதைப்     பார்க்கையில்,   ஜாஹிட்   துணைப்  பிரதமராக  இருப்பதற்குத்தான்   தகுதியானவர்   என்று  பிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்    நினைப்பதுபோல்    தெரிகிறது     என்றார்.