யோங்: பண வசதியுடன் இருப்பது குற்றம் என்றால் பல அரசியல்வாதிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்

ampang“வழக்கத்துமாறாக”  பணவசதியுடன்   வாழ்கிறார்  என்பதற்காக    ஒருவரைக்  கைது   செய்ய  சட்டத்தில்   இடமில்லை     என்கிறார்    கெராக்கான்   இளைஞர்  பிரிவுத்  துணைத்    தலைவர்   எண்டி  யோங்.

இதற்காக  பிகேஆர்    தலைவர்    ஒருவர்   கைது    செய்யப்படுகிறார்   என்றால்    பல   அரசியல்வாதிகளுக்கும்    அதே  நிலைதான்  ஏற்படும்   என்றாரவர்.

வழக்குரைஞரான    யோங்,    மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்   (எம்ஏசிசிசி)   அம்பாங்   பிகேஆர்  இளைஞர்    தலைவர்      ஆடம்  ரோஸ்லியைக்      கைது     செய்திருப்பது  குறித்து     கருத்துரைத்தபோது       அவ்வாறு   கூறினார்.

ஆடம்பரமான   வீட்டில்   வசிக்கிறார்,   பெரிய  கார்களில்  பயணம்  செய்கிறார்,     விலைமதிப்புள்ள   கடிகாரங்களை    அணிவிக்கிறார்    என்பதற்காக   ஒருவரைக்  கைது    செய்வது   நியாய,மல்ல.

“அதை  அனுமதிக்கலாம்   என்றால்  பல   அரசியல்வாதிகளை   விசாரிக்க  வேண்டியிருக்கும்  அல்லது  கைது    செய்ய   வேண்டியிருக்கும்”,  என்றாரவர்.

ஆடம்   கைது    செய்யப்பட்டதற்கான  காரணத்தை    எம்ஏசிசி  அறிவிக்க   வேண்டும்  என  யோங்    வலியுறுத்தினார்.