தமது ஒன்றுவிட்ட சகோதரர் ஹிசாமுடின் ஹுசேன் பிரதமர் இலாகாவில் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து வலம்வந்து கொண்டிருக்கும் ஊகங்கங்களை பிரதமர் நஜிப் நிராகரித்தார்.
துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கும் ஹிசாமுடினுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் நஜிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்காப்பு அமைச்சரான ஹிசாமுடினுக்கு கூடுதல் இலாகா கொடுக்க வேண்டும் என்ற “ஐடியா”வை தெரிவித்தவர் ஸாகிட்தான் என்ற தகவலை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தினார்.
“(சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர் பதவி பற்றி) நான் பல மாதங்களாக ஸாகிட்டுடன் விவாதித்துள்ளேன். அதன் பின்னர், அந்த இலாகாவை ஹிசாமுடினுக்கு அளிக்க வேண்டும் என்று ஆலோசனையை ஸாகிட்தான் அளித்தார்.
“ஆகவே தயவு செய்து, அவர்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்த வேண்டாம்” என்று நஜிப் கூறியதாக என்எஸ்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இவன்களுக்கு கதை சொல்லவா தெரியாது?
பிரதமரின் லொள்ளு தாங்கமுடியலை. இந்த லொள்ளை BELACHAN சாப்பிடும் மலாய்க்காரர்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார்போலும்.
பிரதமர் எப்படி ஹமிடிக்கு ஆப்பு வைத்தாரோ அதேபோல் அமெரிக்காவும் பிரதமருக்கு 1MDB ஆப்பு வைத்துவிட்டது. இனி பிரதமர் அமேரிக்கா செல்வது தனக்குத்தானே ஆப்பு வைத்து கொள்வதற்கு சமமாகும் என்பதை அறிந்துதான் தனது நம்பிக்கைக்குரிய தனது உறவினரை பிரதமர் இலாகாவில் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமித்து விட்டால், அரசாங்க அலுவல்களுக்கு பிரதமரின் பிரதிநிதியாக தனது உறவினரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதில் பிரச்னை இருக்காது என்ற பிரதமர் நஜிப்பின் திட்டம் உலகமே நன்கு அறியும்.
பிரதமருடன் சீனா சென்ற பிரதமரின் மகன் சீனாவில் காணாமல் போனதுபோல, பிரதமரும் கிர்கிஸ்தான் சென்று காணாமல் போனாலும் போகலாம்.