முன்னாள் அம்னோ செனட்டர் எஸாம் 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மற்றும் 15 நபர்களுக்கு எதிராக யுஎஸ்$3.66 பில்லியனுக்கு வழக்கு தொடர்ந்துள்ளார்

 

Ezamsuiteபார்ட்டி பெபாஸ் ராசுவா (பிபிஆர்) தலைவர் முகமட் எஸாம் முகமட் நூர் 1எம்டிபி கடன்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் இதர 15 பேருக்கு எதிராக யுஎஸ்$3.657 பில்லியனுக்கு ஒரு வழக்கை பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

அவரது கோரிக்கை அறிக்கையில் முன்னாள் அம்னோ செனட்டரான எஸாம் இந்த விவகாரத்தில் 16 பேருக்கும் கூட்டான பொறுப்புள்ளது என்று கூறியுள்ளார்.

நிதி அமைச்சர் மற்றும் அரசாங்கத் தலைமை நிருவாகி என்று அடிப்படையில் நஜிப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், 1எம்டிபியும் அரசாங்கமும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

கஜனா தலைமை அதிகாரி முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா, 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமி மற்றும் இரண்டு தற்போதைய மற்றும் ஒன்பது முன்னாள் இயக்குனர்கள் இதர பிரதிவாதிகளாவர்.

வழக்குரைஞர் ஃபாரெஸ் ஜின்னா, எஸாமை பிரதிநிதிக்கிறார்.