14 ஆவது பொதுத் தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட்டாலும் கூட அதை எதிர்கொள்ள பின் தயாராக இருப்பதாக பிரதமர் நஜிப் கூறினார்.
அம்னோ மற்றும் பிஎன் தலைவரான நஜிப் ரசாக் தேர்தலுக்கான நடவடிக்கைகளை அம்னோவும் பிஎன் பங்காளிக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன என்றும் அவற்றின் வலுவான தேர்தல் இயந்திரங்கள் வெற்றியை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாக கூறினார்.
“14 ஆவது பொதுத் தேர்தல் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் நடத்தப்படலாம். இந்த வருடமோ அடுத்த வருடமோ, வெற்றி பெறுவது நாம்தான். நாம் வாளை கூர்மைபடுத்தியுள்ளோம்”, என்று கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர், துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி, அம்னோ மற்றும் பிஎன் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் இருந்தனர்.
தெரிந்தது தானே. தில்லுமுல்லு -பங்களா, இந்தோ “மலேசியர்கள் “, மின்சாரம் திடீர் தடை, ராணுவம்,காவல்,மற்றும் அரசு எந்திரம், திருட்டு வாக்கு – நிச்சயமாக வெல்ல முடியும்.
பிரதமருக்கு நாக்குல சனியும் மூக்குல முனியும் குடியிருப்பதால் 14ஆவது பொதுதேர்தலில் தனது கூட்டணி சுலபமாக வெற்றிபெற கூடிய தொகுதிகளில்கூட தோல்வியை அனைத்து கொண்டிருப்பது தெரிந்தும்கூட வெளியே காட்டிக்காமல் அரசியல் பண்ணுகிற பிரதமர் கோமாளிக்கு நிகரான கோமாளிதான் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படி என்றால் இது நியாயமான தேர்தலாக இருக்காது …