மலாய்மொழி “ஒற்றுமைக்கான மொழி” என்பதால் அதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் நஜிப் ரசாக் தற்காத்துப் பேசினார்.
“நீங்கள் சீன அல்லது இந்திய தாய்மொழிப்பள்ளிக்குச் சென்றாலும்கூட, மலாய்மொழியை நன்றாக பேசும் திறமையை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் (ஏனென்றால்) அது நமது மொழி, ஒற்றுமைக்கான நமது மொழி, நமது அடையாளம்”, என்று மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தில் (யுகேஎம்) இன்று நடைபெற்ற பண்பாடு காங்கிரஸ் 2017 நிகழ்ச்சியில் ஆற்றிய உறையில் நஜிப் கூறினார்.
அனத்துப் பின்னணிகளையும் இனங்களையும் சார்ந்த இளைஞர்கள் மலாய்மொழியை நன்கு பேசக் கற்றிருக்க வேண்டும் என்றாரவர்.
ஓர் இரண்டாவது மொழியைக் கற்றுக்கொள்வதின் முக்கியத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டார். எனினும், அவர்கள் மலாய்மொழியை நிலைநிறுத்தியாக வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
எடுத்துக்காட்டிற்கு, உலக அரங்கில் போட்டியிடுவதற்கு நாட்டிற்கு ஆங்கிலமொழி முக்கியமாகும் என்றாரவர்.
ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட செய்தி அறிக்கையில், ஊராட்சிமன்றங்கள் அவற்றின் வீடுகள் அமைந்திருக்கும் இடங்கள், கடைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் கூறுகள் அடங்கிய பெயர்களை இட வேண்டும் என்றும் மறைபொருள் கொண்ட மேல்நாட்டுப் பெயர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
இருமொழிப் பாடத் திட்டம் (டிஎல்பி) ஆங்கிலமொழிக்குப் பதிலாக தேசியமொழியின், அதாவது மலாய்மொழி, மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்தப் பண்பாடு காங்கிரஸில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கூறுகிறது.
“நாட்டின் தேசியமொழி என்ற வகையில் மலாய்மொழி அறிவு, நிர்வாகம், வணிகம் மற்றும் சட்டம் ஆகியவற்றின் மொழியாக்கப்பட வேண்டும்” என்று அத்தீர்மானம் கூறுகிறது.
உங்கள் இனத்திற்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது என்பதால் எல்லாம் மலாய் மொழிக்கு மாற்ற வேண்டும் என்பது தங்களின் தவறான சிந்தனையாகும் .
வணக்கம். Inspira, Axia, Bezza, போன்றவை தூய மலாய் பெயர்களோ மலேசியா கார் நிறுவனங்கள் வைக்கின்றன.
50 ஆண்டு மலாய் திணிப்பில் எந்த ஒற்றுமை கண்டோம்? பிரித்து ஆளும் நாதாரிகள் ஒற்றுமை பற்றி பேசுகிறான்கள். 57 -69 ல் இருந்த ஒற்றுமை இப்போது இருக்கிறதா? அந்த ஒற்றுமை என்ன ஆனது? இந்த நாடு இந்தோனேசியாவைப்போல் ஆக்கவே இவ்வளவும். கடைசியில் நம்மை மாமாக்களாக்கவும் எல்லாமே.
அப்பாடா! மலாய்க்காரர்களை அரசியல் பதவிகளுக்கு வந்து விடாமல் இருக்க இதுவும் ஒரு ஆயுதம்!