நாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று தாம் எந்த ஒரு காலகட்டத்திலும் வற்புறுத்தியதே இல்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.
அதற்கு மாறாக மலேசியாவைப் போன்ற பல்லின சமுதாயத்தில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஸாகிட் கூறினார்.
“தேசியக் கல்விக் கொள்கை தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. ஆனால், தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கான ஒன்றுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டும்”, என்று கோலகங்சாரில் ஸாகிட் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தொடக்கப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளி வரையில் பல மொழிகளில் கற்பித்தல் அமைவுமுறை இருப்பது தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கு ஓரளவு தடங்களாக இருக்கிறது ஸாகிட் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அது பற்றி கேட்ட போது, “தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று நான் என்றுமே வற்புறுத்தியதில்லை. எனது அறிக்கைக்கு தவறான அர்த்தம் கொடுக்காதீர்”, என்றார் ஸாகிட்.
வணக்கம். தேசியக் கல்விக் கொள்கை தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. ஆனால், தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கான ஒன்றுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டும்”, இதற்கு என்ன அர்த்தம்???
தாய்மொழி பள்ளிகளில் இன துவேசம் போதிக்கப்படுவதில்லை. தேசிய பள்ளிகளிலும் அரசின் பயிற்சிகளிலும் தான் அது போதிக்கப்பட்டு இந்த நாடு இவ்வளவு பிளவு பட்டு மலாய்க்காரர் அல்லாதோரை எதிரிகளாக்கி ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.
மலேசியாவில் தமிழ் பள்ளிகளை மூட வேண்டும் என்று எந்த அரசியல் தலைவனும் சொல்ல முடியாது ! தமிழ் பள்ளிகள் மூட படுவதற்கும் ! தமிழ் பள்ளிகள் புதிதாக உருவாகாமல் இருப்பதற்கும் தமிழ் மக்கள் தான் காரணமே ஒளிய அரசாங்கமோ ! அம்னோ காரனோ காரணம் இல்லை ! அண்மையில் ம . இ .க தலைவன்கள் கலந்து கொண்ட ஒரு சித்திரை விருந்து நிகழ்ச்சி வைரலாகி வருகிறது ! இவனெல்லாம் அமர்ந்திருக்கும் மேடையின் மேல் தமிழ் தாய் படும் அவமானத்தை பாருங்கள் !!
நண்பரே! நீர் சொல்லுவது சரியாக இருந்தாலும் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகளை மூடுவதற்கான எல்லா வேலைகளையும் அரசாங்கம் மறைமுகமாக செய்து கொண்டு வருகிறது. அதற்குத் துணைபோகிறார்கள் ஒரு சில தலைமையாசிரியர்கள். அத்தோடு அரசாங்கத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள். இப்படியெல்லாம் பலவகையாக நமது பள்ளிகள் நசுக்கப்படுவதால் பெற்றோர்களும் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். இவர்களையெல்லாம் மீறி தான் இன்னும் தமிழ்ப்பள்ளிகள் வெற்றிகரமாக செயல்படுகின்றன!