எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விசாரணை முடிந்து விட்டதாக எம்எசிசி கூறுகிறது

 

paullow1எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெர்ஹாட்டின் மீதான விசாரணையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் முடித்து விட்டது என்று பிரதமர் இலாகா அமைச்சர் பால் லோ கூறினார்.

டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டிருந்த கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்திருந்த பதிலில் பால் இவ்வாறு கூறினார்.

அவரின் ஒரு பத்தி பதிலில் மேற்கொண்டு எவ்வித விளக்கமும் இல்லை.

எஸ்ஆர்சியின் நிருவாக இயக்குனர் நிக் பைசால் அரிப் கமில், இயக்குனர் சுபோ முகமட் யாசின் மற்றும் வாணிகர் ஜோ லோ ஆகியோரே எம்எசிசியால் தேடப்பட்டவர்கள்.

அம்மூவரில் லோ மற்றும் சுபோ ஆகியோரிடமிருந்து எம்எசிசி அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. மற்றவர் இன்னும் நழுவிக்கொண்டிருக்கிறார்.

1எம்டிபின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி ரிம74 மில்லியனை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பண மாற்றல் விவகாரத்தில் நஜிப் எந்தக் குற்றமும் புரியவில்லை சட்டத்துறை தலைவர் (எஜி) முகம்ட் அப்பாண்டி தீர்மானித்துள்ளார்