உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட், அமைச்சு நன்யாங் சியாங் நாளேட்டின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கையும் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவையும் குரங்குகளாகக் காண்பிக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக அந்தச் சீனமொழி நாளேடு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்ததையே அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், மீண்டும் அவ்வாறு நடக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
“ஒருவரைக் காயப்படுத்திவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது”, என்று நூர் ஜஸ்லான் கூறியதாக நன்யாங் சியாங் கூறியிருந்தது.