அஸ்மின்: விசாரணைகளை வைத்து ஆடமைத் தண்டிக்கக் கூடாது

azminகுற்றத்தை   நிரூபிக்காமலேயே   ஒருவரைத்    தண்டிக்க  முனையக்   கூடாது  என்கிறார்      பிகேஆர்   துணைத்    தலைவர்  அஸ்மின்   அலி.

பிகேஆர்     அம்பாங்   இளைஞர்    தலைவர்    ஆடம்   ரோஸ்லி    அண்மையில்   கைது    செய்யப்பட்டிருப்பது   குறித்துக்    கருத்துரைத்தபோது   அஸ்மின்    அவ்வாறு   கூறினார்.

ஒருவர்   விசாரிக்கப்படுவதை    வைத்து     அவரைக்   குற்றவாளியாக்கி  விடக்  கூடாது   என சிலாங்கூர்    மந்திரி    புசார்    குறிப்பிட்டார்.

“விசாரணை    நடப்பதை   வைத்து    ஒருவரைத்   தண்டிப்பது  சரியல்ல.

இன்று   ஷா   ஆலமின்  காரற்ற  தினத்தைத்   தொடக்கி  வைத்த  பின்னர்   செய்தியாளர்களிடம்   பேசிய    அஸ்மின், “விசாரணை   நடத்தும்    பொறுப்பை    அந்தந்த   அதிகாரிகளிடமே   விட்டு  விடுங்கள்”,  எனக்  கேட்டுக்கொண்டார்.

ஆடம்  கைது     செய்யப்பட்டது    பற்றிக்   கருத்துரைத்த     அவர்,  மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி)   ஒருவரைக்  கைது   செய்வதும்   விசாரிப்பதும்     வழக்கமான  ஒன்றுதான்  என்றார்.

எம்ஏசிசி,  ஆடமின்  சொத்துகள்   குறித்து    விவரம்   கேட்பதற்காக    அண்மையில்   அவரைத்    தடுத்து   வைத்தது.