ஒரு பெரிய நிறுவனத்திடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆதரவு கோருவதுபோல் அமைந்த போலி கடிதம் குறித்து அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
ஏப்ரல் 6 தேதியிடப்பட்ட அக்கடிதம் பிரதமர்துறை அலுவலக முகவரி கொண்ட தாளில் எழுதப்பட்டிருந்தது, பிரதமரின் கையொப்பத்தையும் கொண்டிருந்தது என்று நாசிர் அக்டார் உசேன் கூறினார். அது வாகனத் தயாரிப்பு மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டிருந்ததாம்.
“பொதுத் தேர்தல் விரைவில் வருவதையொட்டி உங்கள் ஆதரவையும் விசுவாசத்தையும் நாடுகிறேன். உங்களைப் போன்ற மேன்மையான குணம் படைத்தவரின் பக்கத்துணை இருந்தால் இருவரும் ஒன்றிணைந்து பெருஞ் சாதனைகளை நிகழ்த்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”, என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று நாசிர் கூறினார்.
அக் கடிதம் பிரதமரைக் களங்கப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று நாசிர் குறிப்பிட்டார்.
அதே போன்ற கடிதங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.