சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கில் தமக்கெதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதற்குப் புது முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.
அவ்வழக்கில் பொய்ச் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக அன்வார் கூறுகிறார். அவ்வழக்கில் அரசுத் தரப்பு முக்கிய சாட்சியான முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான் உண்மையைச் சொல்லவில்லை என்றாரவர்.
முகம்மட் சைபுல் பொய்ச் சாட்சியம் அளித்தார் என்பது அரசாங்கத்துக்கும் தெரியும் என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த மனுவில் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கருத்தில் கொண்டு முறையீட்டு நீதிமன்றத்திலும் கூட்டரசு நீதிமன்றத்திலும் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.