எஃகு வரி கூடுகிறது: குறைந்த விலை வீடுகள் என்ற பிஎன் வாக்குறுதி என்னவாயிற்று?

dapஇறக்குமதி   செய்யப்படும்   எஃகுக்    கட்டுமானப்  பொருள்களுக்கு    புதிய  வரி    விதிக்கப்பட்டால்   கட்டுமானச்  செலவுகள்   உயரும்  என்பதால்   வீடுகள்   குறைந்த  விலையில்   கிடைக்கும்   என்று  பிஎன்   அளித்த   தேர்தல்  வாக்குறுதி      பொய்யாகிப்  போனது    என்று     பேராக்   டிஏபி   தலைவர்கள்  கூறுகின்றனர்.

“இறக்குமதி   செய்யப்படும்   எஃகுப்  பொருள்களுக்கு  அரசாங்கம்   புது  வரி   விதிக்க  முனைவதைக்  கடுமையாகக்  கண்டிக்கிறோம்.  இப்புது  வரி   கட்டுமானச்  செலவைக்  கூட்டி   சொத்து   விலைகளை   உயர்த்தி   விடும்.

“மேம்பாட்டாளர்கள்    புதிய    இறக்குமதி  வரியை   ஏற்க  மாட்டார்கள்,  அப்படியே     சொத்து   வாங்குவோரிடம்   திணித்து  விடுவார்கள்.

“பிஎன்  அதன்   கடந்த   பொதுத்   தேர்தல்   அறிக்கையில்   கட்டுப்படியான  விலையில்   வீடுகள்   கிடைப்பதற்கு   வகை   செய்வதாக    வாக்குறுதி   அளித்திருந்தது.

“எஃகுப்  பொருள்களுக்கு   இறக்குமதி   வரி   விதிக்கப்படுவது   பிஎன்   அதன்  தேர்தல்    அறிக்கைக்கும்  மக்களின்   நம்பிக்கைக்கும்   துரோகம்  இழைத்து    விட்டது   என்பதைத்தான்  காண்பிக்கிறது”,  என   டிஏபி   சட்டமன்ற   உறுப்பினர்கள்   பால்    யோங்   கியோங் (துரோனோ) ,   ஏ,சிவசுப்ரமணியம் (புந்தோங்),   பேராக்    டிஏபி   பொருளாதார  மேம்பாட்டுத்  தலைவர்   சோங்  ஸெமின்    ஆகியோர்  கூட்டு   அறிக்கை  ஒன்றில்   கூறினர்.