ஏன் மாலை தொழுகைக்கு கிளந்தானில் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்?

 

whycloseshopமாலை தொழுகைக்கு ஏன் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கிளந்தான் அரசு உத்தரவிட்டுள்ளது என்று கேள்வி எழுப்புகிறார் பார்ட்டி அமனா நெகாரா வின் சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா.

முஸ்லிம் கடைக்காரர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு இடப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் முஸ்லிம் அல்லாதவர்கள் மாலை தொழுகை செய்வதில்லை என்று அவர் கோலாலம்பூரில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அனைத்து வியாபாரக் கடைகளும், முஸ்லிம் அல்லாதவர்களுடைதும் சேர்த்து, மாலை தொழுகையின் போது மூடப்பட்டாக வேண்டும் என்று கிளந்தான் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் அப்துல் ஃபாட்டா மாமூட் கூறியதாக ஃப்ரீ மலேசிய டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

தொழுகை அழைப்பு விடுப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஓர் எச்சரிக்கை சீழ்க்கை அடிக்கப்படும், இன்னொன்று 10 நிமிடங்களுக்கு முன்பு அடிக்கப்படும்.

கோத்தாபாரு நகராட்சிமன்றம் இதை ஓர் ஆண்டுக்கு முன்பு அமல்படுத்தி இருந்தாக கூறப்படுகிறது.

இதைக் கடைபிடிக்கத் தவறிய வியாபாரிகளுக்கு முதலில் ஓர் எச்சரிக்கை விடப்படும். மீண்டும் செய்தவர்கள் அவர்களின் வியாபாரம்தற்காலிகமாக தடை செய்யப்படுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.