மகாதிர்: பாஸ்தான் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது

dr mநாட்டில்   மலாய்க்காரர்கள்   மற்றும்    முஸ்லிம்களிடையே      சீர்படுத்த    முடியாத     அளவுக்குப்  பிளவை   ஏற்படுத்தியது    இஸ்லாமிய  கட்சியான   பாஸ்தான்.    அக்கட்சி    தேர்தலில்     தனித்துப்  போட்டியிட்டால்    அதற்கு  வாக்குகள்  கிடைக்காது.

இவ்வாறு   முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்  நேற்றிரவு  அவரது  வலைப்பதிவில்  கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிகளுடன்   ஒத்துழைப்பதில்லை     என்றும்   வெல்ல  முடியாத   இடங்களிலும்    வேட்பாளர்களைக்   களமிறக்குவது     என்றும்    பாஸ்      செய்துள்ள   முடிவு,    அக்கட்சி   எதிரணி   வாக்குகளைச்   சிதறடித்து     அம்னோவுக்கும்    பிரதமர்     நஜிப்    அப்துல்   ரசாக்குக்கும்    ஆதரவாக     செயல்படும்   என்பதைக்  காட்டுகிறது   என்றாரவர்.

“ஒரு  இஸ்லாமிய  கட்சியாக   பாஸ்   நடத்திய   போராட்டம்   பலனளிக்கவில்லை. மலாய்க்காரர்களைப்   பிளவுபடுத்துவதில்  மட்டும்தான்   அது   வெற்றி   கண்டது.

“மீண்டும்  பாஸ்    தேர்தலில்   தனித்துப்  போட்டியிட    விரும்புகிறது.  80    நாடாளுமன்ற   இடங்களுக்குப்   போட்டியிட்டால்    அதற்கு   15   இடங்கள்   கிடைக்கலாம்.  அதற்குமேல்  கிடைக்காது”,  என  மகாதிர்   ஆருடம்   கூறினார்.