மக்ரிப் தொழுகைக்காக கடைகளை அடைக்கும் கருத்தை ஆதரித்தாவர்தான் ஹுஸாம்

husamஇப்போது  பார்டி   அமனா   நெகாரா (அமனா)   உதவித்    தலைவராகவுள்ள   ஹுஸாம்   மூசா முன்பு   கிளந்தான்   ஆட்சிக்குழுவில்  இருந்தபோது   மக்ரிப் (சூரிய  அஸ்தமனத்துக்குப்  பிந்திய)   தொழுகைக்காக    கடைகளை   அடைக்கலாம்   என்ற   கருத்தை   ஆதரித்தவர்தான்     என    கிளந்தான்   மாநில   ஆட்சிக்குழு   உறுப்பினர்   அப்துல்   பாத்தா   மஹ்மூட்   கூறினார்.

மக்ரிப்  தொழுகைக்காக   கடைகள்  அடைக்கப்பட   வேண்டும்     என்று   கிளந்தான்   மாநில    அரசு    உத்தரவிட்டிருப்பது   குறித்துக்   கேள்வி   எழுப்பிய   ஹுஸாமுக்கு   எதிர்வினை   ஆற்றிய   கிளந்தான்  ஊராட்சி,   சுகாதாரம்,  சுற்றுச்சூழல்  குழுத்   தலைவரான    பாத்தா  இவ்வாறு    கூறினார்.

“ஹுஸாம்  அறிந்துதான்   பேசுகிறாரா?

“முன்பு  அவரே  மக்ரிப்புக்காக   வியாபாரத்தை   நிறுத்தி  வைப்பதை   ஆதரித்திருக்கிறார்”,  என்றவர்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

இந்த  விதி   பல    ஆண்டுகளாகவே   இருந்து  வருகிறது   என்று   கூறிய    பாத்தா,  முன்பு   அது   கோத்தா   பாரு   முனிசிபல்   மன்றத்தில்  மட்டுமே  அனுசரிக்கப்பட்டது  என்றார்.

“இப்போது   எல்லா  முனிசிபல்   மன்றங்களும்   அதைப்  பின்பற்ற    வேண்டும்”.