‘திரிசங்கு சொர்க்க நிலையில் தத்தளிக்கும் மருத்துவப் பட்டதாரிகள்’

nieமருத்துவப்  பட்டதாரிகள்,   மருத்துவமனைகளில்   வேலைக்கு   அமர்த்தப்படுவது   குறித்து   பொதுச்  சேவை   ஆணையம்   இதுவரை   எந்த    அறிவிப்பும்   செய்யாமலிருப்பதால்   திரிசங்கு  சொர்க்க   நிலையில்  விடப்பட்டதுபோல்   தத்தளிக்கிறார்கள்    என   கூலாய்  எம்பி   தியொ  நை  மிங்  கூறினார்.

நேற்று      அறிவித்திருக்க   வேண்டும்.  ஆனால்,  திடீரென்று  தள்ளிப்போட்டு      விட்டார்கள்   என்றாரவர்.

“மருத்துவப்    பட்டதாரிகளில்  பலர்    அரசாங்க   மருத்துவமனைகளில்   வேலைக்கு   அமர்த்தப்படுவதற்காக   ஓராண்டுக்குமேல்     காத்திருக்கிறார்கள்”,  என்றாரவர்.

இவர்கள்    பயிற்சி   மருத்துவர்களுக்கான   நேர்காணலுக்குச்  சென்று   முடிவுகளுக்காகக்   காத்திருக்கிறார்கள்.

கடந்த   ஆண்டில்  3,474   மருத்துவப்   பட்டதாரிகள்    நேர்காணலுக்குச்   சென்றார்கள்.  1,687  பேர்  மட்டுமே   அரசாங்க    மருத்துவமனைகளில்    பயிற்சி   மருத்துவர்களாக    வேலைக்கு   அமர்த்தப்பட்டனர்.