சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) த்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி இஸாம் முகம்மட் நூர்தான் நியு ஜெனரேசன் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.கோபி கிருஷ்ணன்.
இஸாம் கட்சித் தலைவர் என்று அறிவிக்கப்பட்டதற்கு தலைவர் ஜி.குமார் அம்மானும் கட்சி உறுப்பினர் சிலரும் நேற்று கண்டனம் தெரிவித்ததை அடுத்து கோபி கிருஷ்ணன் இவ்வாறு விளக்கமளித்தார்.இஸாம் கட்சியின் பெயரை பார்டி பேபாஸ் ரசுவா (ஊழல் அற்ற கட்சி) என்று மாற்றுவதற்கு ஆர்ஓஎஸ்ஸிடம் விண்ணப்பத்திருக்கிறார்.
இஸாமும் முன்னாள் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானும் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் மார்ச் 11-இல் நியு ஜென் கட்சியின் உச்சமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதை மார்ச் 30-இல் கூடிய அவசரப் பொதுக் கூட்டமும் ஏற்றுக்கொண்டது என்றும் கோபி கூறினார்.
இவ்விவரங்கள் ஆர்ஓஎஸ்ஸிடம் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு விட்டன என்றாரவர்.